get paid to paste

Slipstream ஒருமுறைதான் பார்த்தேன். கதையைப் பற்றியும் அதிகம் இணையத்தில் படித்துப் பார்க்கவில்லை. ஆகையால் ஒரு abstract வடிவம் மட்டும் சொல்கிறேன். நிறைய தவறுகள் இருக்கலாம். நான் அவ்வளவு சாமர்த்தியமாக ஒரே முறையில் எல்லாவற்றையும் புரிந்து கொள்பவன் இல்லை.

ஹாப்கின்ஸ் ஒரு எழுத்தாளர். ஒரு கதையை எழுதும் தீவிர மனநிலையில் இருக்கிறார். குதிரைப் பந்தயம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் வந்து நேரம் ஆகிவிட்டது போகலாம் என்று கூறுகிறாள். அதுதான் அவரது கதையின் தொடக்கம். ஆனால் Plot கிடைக்கவில்லை. பெரிய ட்ராஃபிக் ஜாமில் ஒரு கோபக்கார இளைஞன் கையில் துப்பாக்கியோடு ‘எனது Plot தொலைந்து போய்விட்டது’ என்று புலம்புகிறான். துப்பாக்கியால் சுட முயற்சித்து ஹாப்கின்ஸின் காரில் வந்து விழுகிறான். 

அடுத்து எப்படி தொடர்வது என்று தெரியாமல் இருக்கும்போது, டிவியில் அந்த நிகழ்ச்சியை காணும் Gina இன்னொரு நண்பியோடு உரையாடுகிறாள். அவள் ஒரு நைட்கிளப்பில் வேலை செய்கிறாள். அவள் வெளியில் கிளம்பும்போது ஹாப்கின்ஸ் அவளை வெளியில் சந்திக்கிறார். தனது கதை பாத்திரம் போல் இருப்பதால் பேச முற்படுகிறார், அவள் நண்பனான Bouncer தடுக்கிறான். அவள் கிளம்பிப் போக அந்த பௌன்சர் காரில் கிளம்ப காரில் பின் சீட்டில் மறைவாக இருக்கும் ஒருவன் அவனுடன் உரையாடுகிறான். உரையாடலில் இருந்து அந்த பௌன்சர் பின்சீட்டிலிருப்பவனிடம் ஏதோ கடன்பட்டு இருக்கிறது தெரிகிறது. ஓரிடத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டி அவனை நிறுத்தச் சொல்லி துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான் பின்சீட்டிலிருப்பவன். பிறகு அவன் சாலையை கடந்து போகும்போது ஒரு கார் குறுக்கிடறது. எதிர்சாரியில் அவனது பார்டனர் இருக்க அவனைச் சேர்ந்து அவனது காரில் தொடர்கிறான்.

இப்பொழுது கதாசிரியருக்கு (ஹாப்கின்ஸ்) திருப்தியாகவில்லை. வேறு வழியில் கதையை நகர்த்துகிறார். Ginaவும் அவளது தோழியும் பயணம் கிளம்புகிறார்கள். ஒரு உணவு விடுதியை சேர்கிறார்கள். அங்கு ஒரு வயதான செவ்விந்தியர் இவர்களுக்கு முகமன் கூறுகிறார். விடுதியின் உள்ளே ஒரு பணிப்பெண் ஒரு செஃப் இருக்கிறார்கள். இவர்கள் ஆர்டர் செய்ய கதை அந்த பணிப்பெண் பார்வைக்கு போகிறது. அவள் ஃப்ரெஷ் ஏர் எடுத்துக் கொள்ள உணவகத்தின் வெளியில் வருகிறாள். செவ்விந்தியரோடு பேசுகிறாள். புகைபிடிக்கிறாள்.

மீண்டும் கதையில் ட்விஸ்ட் சேர்க்க முதலில் கொலை செய்தவனையும் அவனது பார்டனரையும் அந்த உணவகத்திற்கு கூட்டி வருகிறார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணவகத்தில் இருப்பவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதில் ஒருவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மூர்ச்சையாகிறான். 

இப்பொழுது அது மொத்தமும் சினிமா படப்பிடிப்பு என்று தெரிகிறது. ஒரு பெரிய படப்பிடிபு குழு சுற்றி நிற்க படம் பிடிக்கிறார்கள். எல்லா காரக்டரும் நடிகர்கள். அவர்களுக்கு இன்னொரு பரிமாணம் காட்டப்படுகிறது. 

மயக்கம் போட்ட நடிகன் இறந்துவிட்டான். இப்பொழுது கதையில் மாற்றம் செய்யவேண்டும். கூப்பிடு கதாசிரியரை என்கிறார்கள். ஹாப்கின்ஸ் மீண்டும் கதையினுள் வருகிறார். இப்பொழுது அவருக்கு Gina பார்த்தால் குழப்பம். அவள் அவர் மனைவி மாதிரி இருக்கிறாள். ஒரு சீனை மாற்றி மாற்றி எழுதுகிறார். Ginaவை சந்திப்பது போல் ஒரு சீன். இல்லை அவள் என் மனைவி என்று தீர்மானித்து அதே சீனை Gina இன்னொரு நடிகையை இவருக்கு அறிமுமம் செய்வது போல... படத்தயாரிப்பாளன் அவருடைய எடிட்டர் போல இருக்கிறான். இப்பொழுது அவருக்கு பிரச்சினை ஆரம்பமாகிறது.

உண்மையில் Gina அவருடைய மனைவிதான். அவர் கதையில் அவளை ஒரு கதாபாத்திரமாக உபயோகித்திருக்கிறார். இரவு உணவு முடிந்து திரும்பி வந்து பார்த்தால், அவருடைய கதையிலிருந்து படதயாரிப்பாளனும், டைரகட்ரும் அவருடைய கணிணிக்குள் இருந்து கொண்டு அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குப்பை கொட்ட வெளியில் போனால் முதலில் கொலையுண்ட பௌன்சர் தலையில் காயத்தோடு வருகிறான். ‘என்னை 32ம் பக்கத்திலேயே எப்படி சாகடிக்கலாம்? நான் 50ம் பக்க்த்திலும் வருகிறேனே? என்று கேள்வி கேட்கிறான். அவரால் தாங்க முடியாமல் மூச்சிரைப்பு வருகிறது.

பிறகு பார்த்தால் அவர் வரவேற்பறையில் இருக்க அவர் மனைவி நண்பர்களிடம் சொல்கிறார் ‘குப்பையை வெளியில் கொண்டு கொட்ட முடியுமா என்று கேட்டேன், அவர் எழுந்திருக்கவேயில்லை. மூச்சிரைத்துக் கொண்டிருக்கிருந்தார்’ என்று.

இங்கு மூன்றாவது கட்டமாக முன்னர் பார்த்த பாத்திரங்கள் மீண்டும் வருகின்றன. எல்லாம் எழுத்தாளனின் ரியல் லைஃப் பாத்திரங்கள். அந்த பௌன்சர் ஒரு போலிஸ் காப். கதையில் கொலை செய்து தானும் செத்தவனும் ஒரு போலிஸ் காப். அவனுடைய கூட்டாளிதான் டாக்டர். 

கதாசிரியனுக்கு மிகவும் குழப்பம். ஆஸ்பத்திரியில் இருந்து இறங்கி ஓடுகிறான். ட்ராஃபிக்கில் எதிரே வரும் காரில் மோதி இறக்கிறான். அந்தக் காரை ஓட்டி வந்தவன் கதையில் முதலில் துப்பாக்கியோடு ‘கதை Plot தொலைந்து விட்டது’ என்று புலம்பி ஹாப்கின்ஸ் காரில் விழுந்து சாகும் அதே இளைஞன்.

இப்படியாக கதை வெவ்வேறு தளத்தில் பயனித்து ஒரு வட்டமாக தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. இதை ஹாப்கின்ஸ் அற்புதமாக எடுத்திருப்பார். ஆனால் இந்தப் படம் பெரிதாக பேசப்படாதததிற்கு இந்தக் கதையின் குழப்பங்களே காரணம். குழப்பங்கள்தானே இதன் கதையே :)

Pasted: Jan 8, 2010, 3:05:31 pm
Views: 115